×

தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை

ஆரல்வாய்மொழி, மே 1: நாகர்கோவில் – காவல்கிணறு புதிய நான்குவழி சாலையில் தற்போது அரசு பஸ்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நான்குவழி சாலையில் இணைப்பு சாலைகள் செல்லும் சில பகுதிகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. ஆனால் தோவாளை அருகே இந்த நான்குவழி சாலையில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்காமல், ரோட்டின் பாதி பகுதியை அடைத்தவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்கு சரியாக தெரியாததால், வேகமாக வரும் வாகனங்கள் தடுப்புகளில் மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதேபோல தெற்கு பகுதியில் இருந்து டாரஸ் லாரிகளில் மண் ஏற்றிக்கொண்டு நான்குவழி சாலையில் ஏறுகின்றன. அப்போது காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்கள் இந்த டாரஸ் லாரியில் மோதி விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வைக்க வேண்டும். மேலும் வானக ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்தடை
குலசேகரம் மின் விநியோக பிரிவு உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவட்டார் மின் விநியோக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இப்பதால் மே 2ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முள்ளுவிளை, தேமானூர், தோட்டவாரம், மூவாற்றுமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது.

The post தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : lane ,Thovala ,Aralwaimozhi ,Nagercoil – ,Kavalkinaru ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...